/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தி.மு.க.,வுக்கு போடுவது பாவ ஓட்டு அந்த தவறை செய்யாதீர்:அண்ணாமலை
/
தி.மு.க.,வுக்கு போடுவது பாவ ஓட்டு அந்த தவறை செய்யாதீர்:அண்ணாமலை
தி.மு.க.,வுக்கு போடுவது பாவ ஓட்டு அந்த தவறை செய்யாதீர்:அண்ணாமலை
தி.மு.க.,வுக்கு போடுவது பாவ ஓட்டு அந்த தவறை செய்யாதீர்:அண்ணாமலை
ADDED : ஏப் 05, 2024 04:45 AM
ப.வேலுார்: ''தி.மு.க.,வுக்கு ஓட்டு போடுவது பாவ ஓட்டு, தயவு செய்து அந்த தவறை மீண்டும் செய்யாதீர்கள்,'' என, அண்ணாமலை பேசினார்.
நாமக்கல் லோக்சபா தொகுதி, பா.ஜ., வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து, பரமத்தியில் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு ஓட்டும், அடுத்த ஐந்தாண்டுகளை சீர்படுத்தும். கடந்த காங்., கூட்டணி ஆட்சியில், ஒரு மாதம் கழித்து தான் பிரதமர் மன்மோகன்சிங் என அறிவித்தனர். தற்போதுள்ள, 'இண்டியா' கூட்டணியிலும் பிரதமர் யார் என்று தெரியாத நிலைதான் உள்ளது.
பொண்ணும், மாப்பிள்ளையும் பார்க்காமல் திருமணம் செய்து கொண்டு, பின்னர் முகத்தை காட்டுவது போல காங்., கூட்டணியான,'இண்டியா' கூட்டணி உள்ளது. இந்த கூட்டணிக்கு செலுத்தும் ஒவ்வொரு ஓட்டும் யாருக்கும் பயன்படாதது.
முதல்வர், அமைச்சர்,
எம்.எல்.ஏ., செய்ய முடியாததை தி.மு.க.,- எம்.பி., செய்து விட முடியுமா? தி.மு.க., கூட்டணிக்கு வாக்களிப்பதற்கு பதில், பா.ஜ.,வுக்கு வாக்களித்தால் உங்கள் குரல் டெல்லியில் எதிரொலிக்கும். தமிழகத்திற்கு அதிகமான நலத்திட்டங்கள் கிடைக்கும். பாராளுமன்றம் சென்று என்னென்ன நலத்திட்டங்கள் தேவையோ, அத்தனையும் வாங்கி கொடுக்க கூடிய திறமையான வேட்பாளர் ராமலிங்கம்.
தி.மு.க.,வுக்கு செலுத்தும் ஒவ்வொரு ஓட்டும் பாவ ஓட்டு. அந்த பாவத்தை மீண்டும் செய்ய வேண்டாம். தி.மு.க., - அ.தி.மு.க., என யார் ஓட்டு கேட்டு வந்தாலும் புறக்கணியுங்கள். தி.மு.க., அளித்த, 500 வாக்குறுதிகளில் முழுமையாக, 20 ஐ கூட நிறைவேற்றவில்லை.
கருணாநிதியின் கட்சத்தீவு குறித்த தொடர்பை, உண்மையை வெளியிட்டதால் தி.மு.க., மிரண்டு போயுள்ளது. கட்சத்தீவை பா.ஜ., கட்சி மீட்டே தீரும். 20 ஆண்டு காலமாக தமிழகத்தை இரண்டே பேர் மட்டுமே பிடித்து வைத்துள்ளனர்.
இவ்வாறு பேசினார்.
நாமக்கல் மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், ஊடகப்பிரிவு பொறுப்பாளர் செல்வராஜ், நாமக்கல் மாவட்ட பொதுச்
செயலர் சுபாஷ், மாவட்ட
ஊடகப்பிரிவு தலைவர் சுகந்தரன், பா.ம.க., மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், ப.வேலுார் நகர செயலர் கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
* வெண்ணந்துார் பகுதியில் நாமக்கல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.,வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து, மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
கடந்த, 10 ஆண்டுகளில் 72 அமைச்சர்கள் மீது குண்டூசி அளவுக்கு கூட ஊழல் இல்லாமல் மத்தியில் ஆட்சி நடந்துள்ளது. பெண்கள் அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்குவதாக கூறி, 30 சதவீதம் பெண்களுக்கு மட்டுமே வழங்கியுள்ளனர். இதற்காக தாலிக்கு தங்கம் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம் உள்ளிட்ட, முக்கிய திட்டங்களை நிறுத்தி விட்டு உரிமைத்தொகையை வழங்கியுள்ளனர்.
பா.ஜ., பொறுப்பேற்றவுடன் எம்.பி.,யாக ராமலிங்கத்தை தேர்வு செய்யப்பட்ட பின், கண்டிப்பாக காவிரியுடன் திருமணிமுத்தாற்றை இணைப்போம். அதேபோல், வேளாண் பொருட்களுக்கு ஏற்றுமதி மையம் அமைக்கப்படும்.
இவ்வாறு பேசினார்.

