/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கருப்பத்துாரில் தென்கரை வாய்க்கால் துார்வாரும் பணி மும்முரம்
/
கருப்பத்துாரில் தென்கரை வாய்க்கால் துார்வாரும் பணி மும்முரம்
கருப்பத்துாரில் தென்கரை வாய்க்கால் துார்வாரும் பணி மும்முரம்
கருப்பத்துாரில் தென்கரை வாய்க்கால் துார்வாரும் பணி மும்முரம்
ADDED : மே 16, 2024 04:05 AM
கிருஷ்ணராயபுரம்: கருப்பத்துார் வழியாக செல் லும், கட்டளை தென்கரை வாய்க்கால் துார்வாரும் பணிகள், பொக்லைன் இயந்திரம் கொண்டு துவங்கப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனுார் காவிரி ஆற்றில் இருந்து கட்டளை தென்கரை வாய்க்கால் செல்கிறது. லாலாப்பேட்டை, கள்ளப்பள்ளி, கருப்பத்துார் வழியாக செல்லும் வாய்க்கால் வழி தடங்களில் உள்ள மண் குவியல்கள், செடிகள், புதர்கள் ஆகியவைகளை, முழுமையாக அகற்றும் வகையில் பொக்லைன் இயந்திரம் கொண்டு துார்வாரும் பணிகள் துவங்கியுள்ளது. தொட ர்ந்து வாய்க்காலின் இரு கரைகளை வலுப்படுத்தும் வகையில், மண் கொண்டு சமன்படுத்தப்பட்டது. வாய்க்காலில் தண்ணீர் திறக்கும் போது, தங்கு தடையின்றி பாசனத்திற்கு செல்லும் வகையில் பணிகள் நடந்தது. மாயனுார் நீர்வளத்துறை அதிகாரிகள், பணியாளர்கள் பணிகளை பார்வையிட்டனர்.