ADDED : ஏப் 01, 2024 03:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி: இயேசு உயிர்த்தெழுந்த நாளை, கிறிஸ்தவர்கள், 'ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடினர்.
இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த நாளை, 'புனித வெள்ளி'யாக, கடந்த வெள்ளிக்கிழமை, அரவக்குறிச்சி தேவாலயங்களில் அனுசரிக்கப்பட்டது. புனித வெள்ளியிலிருந்து, மூன்றாம் நாள் ஈஸ்டர் பண்டிகை கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது. அதன்படி, அரவக்குறிச்சியில் உள்ள துாய தோமா ஆலயம், புனித சவேரியார் ஆலயம், பள்ளப்பட்டி துாய பவுல் ஆலயம், சவுந்தராபுரம் நல்ல மேய்ப்பன் ஆலயம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ஆலயங்களில், நள்ளிரவு முதலே சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில், அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று, உலக நன்மை வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

