/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் காயம்
/
டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் காயம்
ADDED : செப் 04, 2024 03:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி;திருப்பூர் மாவட்டம், முத்துார் அருகே மூலகவுண்டன்புதுார் பகுதியை சேர்ந்தவர் சென்னியப்பன், 70. இவர் நேற்று கரூரிலிருந்து, கோவை செல்லும் சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.
தென்னிலை அருகே கரைப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, எதிரே நாமக்கல் மாவட்டம், மோகனுார் அருகே ஒருவந்துார் பாவாடை தெருவை சேர்ந்த சுரேஷ், 43, என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார், சென்னியப்பன் டூவலர் மீது மோதியது. இந்த விபத்தில் சென்னியப்பனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ
மனையில் அனுமதித்தனர். தென்னிலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.