ADDED : ஜூன் 10, 2024 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்டம், தொப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராக்கப்பன், 70. இவர் கடந்த, 8ல் டி.வி.எஸ்., மொபட்டில், கரூர் - கோவை சாலை தென்னிலை பஸ் ஸ்டாப் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற அரசு பஸ், ராக்கப்பன் மீது மோதியது.
அதில், படுகாயமடைந்த ராக்கப்பன், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுகுறித்து, ராக்கப்பனின் மகள் காந்திமதி, 43, கொடுத்த புகார்படி, தென்னிலை போலீசார் அரசு பஸ் டிரைவர் சதீஷ், 45, மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.