/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இமானுவேல் சேகரன் நினைவு நாள் தி.மு.க.,-அ.தி.மு.க., வினர் அஞ்சலி
/
இமானுவேல் சேகரன் நினைவு நாள் தி.மு.க.,-அ.தி.மு.க., வினர் அஞ்சலி
இமானுவேல் சேகரன் நினைவு நாள் தி.மு.க.,-அ.தி.மு.க., வினர் அஞ்சலி
இமானுவேல் சேகரன் நினைவு நாள் தி.மு.க.,-அ.தி.மு.க., வினர் அஞ்சலி
ADDED : செப் 12, 2024 07:34 AM
கரூர்: சுதந்திர போராட்ட வீரர் இமானு
வேல் சேகரன், 67வது நினைவு நாள் நேற்று கரூரில் அனுசரிக்கப்பட்டது.
கரூர் மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், இமா-னுவேல் சேகரன் உருவப்படம் வைக்கப்பட்டிருந்-தது. கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாம சுந்-தரி மலர் துாவி அஞ்சலி செலுத்தினார். மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், மாவட்ட துணை செயலர் ரமேஷ் பாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
* கரூர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, இமானுவேல் சேகரன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட ஜெ., பேரவை செயலர் நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலர் தானேஷ் முத்துக்குமார், ஒன்றிய செயலர் கமலகண்ணன், பகுதி செயலர் தினேஷ் உள்ளிட்ட பலர் பங்-கேற்றனர்.
* கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, வைக்கப்பட்டி-ருந்த இமானுவேல் சேகரன் படத்துக்கு, புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலர் அசோகன் தலைமையில், வக்கீல் அணி செயலர் சுபாஷ், இளைஞர் அணி செயலர் விஜய், ஒன்றிய செய-லர்கள் கண்ணன், மலையப்பன் உள்பட பலர் பங்-கேற்றனர்.
* கரூர் மாவட்ட, அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில், கரூர் சின்ன ஆண்-டாங்கோவிலில் உள்ள அலுவலகத்தில், இம்மா-னுவேல் சேகரன் உருவப்
படத்துக்கு, வடக்கு மாவட்ட செயலர் ஆயில் ரமேஷ் தலைமையில், நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
* கரூர் மாவட்ட தேவேந்திர குல வேளாளர் உற-வுகள் சங்கம் சார்பில், பஸ் ஸ்டாண்ட் அருகே வைக்கப்பட்டிருந்த இமானுவேல் சேகரன் படத்-துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கனகராஜ், பொருளாளர் ஜெயபாலன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பா.ஜ., சார்பில், மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில், நிர்வாகிகள் அஞ்-சலி செலுத்தினர்.
* தமிழர் தேசிய கொற்றம் சார் பில், தலைவர் வக்கீல் பாண்டியன் தலைமையில், கரூர் மனோ-கரா கார்னர் பகுதியில், இமானுவேல் சேகரன் படத்துக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்-டது. நிர்வாகிகள் விஜி, சசிக்குமார், ரகுவரன், ராஜா, விஜயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.