/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'நோ பார்க்கிங்'கில் வாகனங்கள் அபராதம ்விதிக்க எதிர்பார்ப்பு
/
'நோ பார்க்கிங்'கில் வாகனங்கள் அபராதம ்விதிக்க எதிர்பார்ப்பு
'நோ பார்க்கிங்'கில் வாகனங்கள் அபராதம ்விதிக்க எதிர்பார்ப்பு
'நோ பார்க்கிங்'கில் வாகனங்கள் அபராதம ்விதிக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 01, 2024 03:44 AM
கரூர்: கரூர் நகர பகுதியில், 'நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தும் வாகனங்களுக்கு, போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கரூர் ஜவஹர் பஜார், உழவர் சந்தை சாலை, தின்னப்பா கார்னர் சாலை, கோவை சாலை உள்ளிட்ட நகர பகுதிகளில், வணிக நிறு வனங்கள், ஓட்டல்கள், வங்கிகள் மற்றும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் உள்ளன. இதனால், கரூர் நகர பகுதிகளின் சாலைகளில் கார், டூவீலர்கள், வேன்கள் நிறுத்தப்படுவதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், முக்கிய சாலைகளில் தரையில் கயிறுகளை அடித்தும், இரும்பு தடுப்புகளை வைத்து, நோ பார்க்கிங் பகுதியாக, போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். ஆனால், பொதுமக்கள் நோ பார்க்கிங் பகுதியில், பல மணி நேரம் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதையடுத்து, நேற்று, 'நோ பார்கிங்' பகுதியில் வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்கும் வகையில், பொதுமக்களுக்கு போக்குவரத்து போலீசார், ஓட்டுநர் உரிமம் இல்லாததது, டூவீலர்களில் ெஹல்மெட் இல்லாமல் சென்றது உள்ளிட்ட, பல்வேறு போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக, அபராதம் விதிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.