ADDED : ஆக 27, 2024 03:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்,: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், காட்டூர், மாயனுார், எழுதியாம்பட்டி, தாளியாம்பட்டி பகுதியில் விவசாயிகள் பரவலாக பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். பூக்களை பறித்து கரூர், குளித்தலை, திருச்சி, முசிறி ஆகிய பகுதிகளில் செயல்படும் பூ மார்க்கெட்டுகளுக்கு கொண்டு சென்று விற்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக, பெய்த மழை காரணமாக செடிகள் பசுமையாக வளர்ந்து பூக்கள் பூத்து வருகிறது. தற்போது பூக்கள் வரத்து காரணமாக விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதில் சின்ன ரோஜா கிலோ, 60 ரூபாய், விரிச்சிப்பூக்கள் கிலோ, 80 ரூபாய், செண்டுமல்லி பூக்கள், 20 ரூபாய்க்கு விற்கப்பட்டது. முகூர்த்த சீசன் இல்லாததால், பூக்கள் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறினர்.