/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆண்கள் பள்ளி மைதானத்தில் கீழே விழும் நிலையில் மரம்
/
ஆண்கள் பள்ளி மைதானத்தில் கீழே விழும் நிலையில் மரம்
ஆண்கள் பள்ளி மைதானத்தில் கீழே விழும் நிலையில் மரம்
ஆண்கள் பள்ளி மைதானத்தில் கீழே விழும் நிலையில் மரம்
ADDED : ஜூன் 17, 2024 01:13 AM
கரூர்: புகளூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கீழே விழும் நிலையில் மரம் உள்ளது.
கரூர் மாவட்டம், புகளூர் அரசு ஆண்கள் மேல்
நிலைப்பள்ளியில், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்குள்ள விளையாட்டு மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். காலை, மாலை வேளைகளில் பொதுமக்கள் மைதானத்தில் நடை பயிற்சி மேற்கொள்வதும் வழக்கம். மழை காரணமாக மைதானத்தில் நன்கு வளர்ந்திருந்த மரம் சாய்ந்தது. மற்றொரு மரம் வழுவிழந்து சாயும் நிலையில் நிற்கிறது. பாரத்தை தாங்க முடியாமல் எப்போது வேண்டுமானாலும் மரம் முழுவதுமாக சாய்ந்து விழும் நிலை உள்ளது.
தற்போது பள்ளி திறக்கப்பட்டு விட்டதால், மைதானத்தில் நடமாட்டம் காணப்படுகிறது. விளையாட்டு வீரர்கள் தினமும் பயிற்சி மேற்கொள்வதால், விழுந்த மரம் அனைவருக்கும் இடைஞ்சலாக உள்ளது. மேலும், விளையாடும் பகுதியில் அபாயகரமாக சாய்ந்து நிற்கும் மரத்தை வெட்டி அகற்ற வேண்டும் அல்லது நவீன முறையில் மரக்கிளைகளை வெட்டி வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நட வேண்டும்.
இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.