/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
விட்டுப்பாளையம் காவிரியில் வெள்ளம் சமுதாய கூடத்தில் தங்கிய 39 குடும்பத்தினர்
/
விட்டுப்பாளையம் காவிரியில் வெள்ளம் சமுதாய கூடத்தில் தங்கிய 39 குடும்பத்தினர்
விட்டுப்பாளையம் காவிரியில் வெள்ளம் சமுதாய கூடத்தில் தங்கிய 39 குடும்பத்தினர்
விட்டுப்பாளையம் காவிரியில் வெள்ளம் சமுதாய கூடத்தில் தங்கிய 39 குடும்பத்தினர்
ADDED : ஆக 04, 2024 01:39 AM
கரூர், கரூர், தவிட்டுப்பாளையம் பகுதி காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கால், 39 குடும்பத்தினரை மீட்டு, சமுதாய கூடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், தவிட்டுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள சமுதாய கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்கி உள்ள பொதுமக்களை கண்காணிப்பு அலுவலர் மற்றும் நில நிர்வாக ஆணையர் பழனிச்சாமி, கலெக்டர் தங்கவேல் ஆகியோர் சந்தித்து, அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.
அப்போது, கலெக்டர் தங்கவேல் கூறியதாவது:
கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் அதிகளவு நீர்வரத்து வந்து கொண்டு இருக்கும் காரணத்தால், பாதுகாப்பு கருதி பொதுமக்கள் காவிரி ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ, புகைப்படம் எடுக்கவோ கூடாது என, அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தாழ்வான பகுதியில் வசிக்கும் பொது மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. அந்த வகையில், தவிட்டுப்பாளையம் காவிரி கரையோரம் தாழ்வான பகுதியில் வசிக்கும், 39 குடும்பங்களை சேர்ந்த நபர்கள் தவிட்டுப்பாளையம் சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மூன்று நேரமும் உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ முகாம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு, அவர் கூறினார்.
டி.ஆர்.ஓ., கண்ணன், கரூர் ஆர்.டி.ஓ., முகமது பைசல், புகழூர் தாசில்தார் தனசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.