/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெயிலை சமாளிக்க 'நிலப்போர்வை' விவசாயிகள் கடைப்பிடிக்க அறிவுரை
/
வெயிலை சமாளிக்க 'நிலப்போர்வை' விவசாயிகள் கடைப்பிடிக்க அறிவுரை
வெயிலை சமாளிக்க 'நிலப்போர்வை' விவசாயிகள் கடைப்பிடிக்க அறிவுரை
வெயிலை சமாளிக்க 'நிலப்போர்வை' விவசாயிகள் கடைப்பிடிக்க அறிவுரை
ADDED : மே 16, 2024 04:15 AM
வீரபாண்டி: கோடை வெயிலில் பயிர்கள் வாடி விடாமல் தடுக்க, 'நிலப்போர்வை' முறையை விவசாயிகள் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் மாவட்டம் வீரபாண்டி வட்டார வேளாண் துறை உதவி இயக்குனர் பிரியங்கா(பொ) அறிக்கை:
கோடையில் ஏற்படும் வறட்சியை சமாளித்து பயிர்கள் வளர, 'நிலப்போர்வை' தொழில்நுட்பம் சிறந்த பயன் தரும்.
செய்தித்தாள்: செய்தித்தாள்களை பயன்படுத்தி எளிதாக நிலப்போர்வை அமைக்க முடியும். முனைகளில் கூழாங்கற்கள் அல்லது சரளை கற்களை வைத்து காற்றில் பறக்காதபடி அடுக்க வேண்டும். அதிகமான காற்று அல்லது சூறைக்காற்று அடிக்கும்போது செய்தித்தாள் போர்வை பலன் தராது.
மரப்பட்டை: சிறு மரப்பட்டை, சில்லுகள், மரத்துாள் ஆகியவற்றால், தோட்டங்களில் நிலப்போர்வை அமைக்க முடியும். மரங்களை சுற்றி, 2 அங்குலம் தள்ளி, இதை அமைக்க வேண்டும். இவற்றின் உயரம், 2 முதல், 4 அங்குலம் போதுமானது. தேவைக்கேற்ப, 6 முதல், 8 அங்குலம் வரையும் அமைக்கலாம்.
இலை: மரங்கள், புதர்களை பயன்படுத்தி தோட்டங்களில் நிலப்போர்வை அமைக்கலாம். காய்ந்த இலைகளாக இருந்தால், 3 முதல், 4 அங்குலம் வரை இருந்தால் போதும்.
புல்: புற்களை, 2 முதல், 3 அங்குலம் வரை அடுக்குகளாக வைத்து நிலப்போர்வை அமைக்கலாம். புற்கள் அழுக தொடங்கியதும், அதை அகற்றி விட்டு புது புற்களை கொண்டு நிரப்பி பயன்படுத்தலாம். நிலப்போர்வை அமைப்பதால் மண்ணின் கட்டமைப்பு மாறுகிறது. எளிதில் மட்கி மண் வளம் மேம்படும். மண் அரிப்பு, நீர் ஆவியாதல் தடுக்கப்படும். மண்ணில் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும். களைகள் வளராமல் தடுக்கும். விவசாயிகள், வயல்களில் தேவைக்கேற்ப நிலப்போர்வைகளை அமைத்து கோடை வெயிலில் இருந்து பயிர்களை காக்க வேண்டும்.