/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
விவசாய நிலங்கள் டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் ஒருங்கிணைந்து செயல்பட விவசாயிகள் கோரிக்கை
/
விவசாய நிலங்கள் டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் ஒருங்கிணைந்து செயல்பட விவசாயிகள் கோரிக்கை
விவசாய நிலங்கள் டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் ஒருங்கிணைந்து செயல்பட விவசாயிகள் கோரிக்கை
விவசாய நிலங்கள் டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் ஒருங்கிணைந்து செயல்பட விவசாயிகள் கோரிக்கை
ADDED : செப் 16, 2024 03:17 AM
கரூர்: விவசாய நிலங்கள் டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்திற்கு, மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைத்து செயல்பட்டால் தான், அரசுகளிடையே பிரச்னை ஏற்படாது என, காவிரி பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் ராஜாராம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
வேளாண் துறை செயலாக்கத்தை, டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு, 2,417 கோடி ரூபாய் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலுமுள்ள விவசாயிகளின் பெயர், முகவரி, நில அளவு, சாகுபடி விபரம், வருமானம் ஆகியவை கணக்கிடவுள்ளதாக, மத்திய வேளாண்துறை செயலாளர் தேவேஸ் சதுர்வேதி தெரிவித்துள்ளார். மனிதர்களுக்கு ஆதார் கார்டு போல, இது நிலத்திற்கான கார்டு. இதன் மூலம் அரசின் மானியம் வேளான் திட்டங்கள் விரைவில் விவசாயிகளுக்கு கிடைத்திடும். விவசாய அடையாள அட்டை நில உடமையாளர் மற்றும் குத்தகை பதிவு உரிமை சட்டத்தில் பதிவு செய்தவர்களுக்கு மட்டும் வழங்கப்படும்.
மேலும், மத்திய அரசின் திட்டம் முழுமையாக அனைத்து விவசாயிகளுக்கும் சென்றடைவதில்லை. பல மாநிலங்களில் விவசாயிகளின் விவரம் சரியாக இல்லை. கடந்த ஜூலை, 31 வரை, தமிழகத்தில், 46 லட்சத்து, 76,080 விவசாயிகள் பிரதமரின் கிசான் திட்டத்தில் பயனாளிகளாக உள்ளனர். வேளாண் முக்கிய தொழிலாக உள்ள மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில், குறைந்தளவிலேயே பிரதமர் கிசான் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில், பல ஆண்டுகளாக குத்தகை பதிவு உரிமை சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. குடும்ப பாகப்பிரிவினை நிலங்கள் சரியாக பராமரிக்கப்படவில்லை. கூட்டு பட்டாவில் இறந்தவர் பெயர் நீடிக்கிறது. கோவில், வக்பு வாரியம் நிலங்கள் உள்பட ஏராளமான குளறுபடிகள் உள்ளன. இவற்றை மாநில அரசு சரிசெய்தால் மட்டுமே, மத்திய அரசின் இந்த திட்டம் அமல்படுத்த முடியும். எனவே, மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்து ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.