/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயனுார் கதவணை பகுதியில் மீன் பிடிப்பு பணி முடக்கம்
/
மாயனுார் கதவணை பகுதியில் மீன் பிடிப்பு பணி முடக்கம்
மாயனுார் கதவணை பகுதியில் மீன் பிடிப்பு பணி முடக்கம்
மாயனுார் கதவணை பகுதியில் மீன் பிடிப்பு பணி முடக்கம்
ADDED : ஆக 06, 2024 01:48 AM
கிருஷ்ணராயபுரம், மாயனுார் கதவணை பகுதியில், காவிரி ஆற்றில் அதிகமான தண்ணீர் செல்வதால் மீன் பிடிப்பு பணி முடங்கியுள்ளது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. இதில் காவிரி நீர் சேமிக்கப்படுகிறது. இங்குள்ள நீரில் மீன்கள் வளர்க்கப்படுகிறது. தற்போது மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் மாயனுார் கதவணை வழியாக டெல்டா பகுதிகளுக்கு காவிரி ஆற்றில் திறக்கப்படுகிறது.
கூடுதல் நீர் வரத்து காரணமாக தற்போது மீன் பிடிப்பு பணி முடக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகமான தண்ணீர், காவிரி ஆற்றில் செல்லும் போது மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் மீன் பிடித்தல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததும், மீண்டும் மீன் பிடிப்பு பணி துவங்கும்.