/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டி.என்.பி.எல்., நிறுவனம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்
/
டி.என்.பி.எல்., நிறுவனம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்
டி.என்.பி.எல்., நிறுவனம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்
டி.என்.பி.எல்., நிறுவனம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்
ADDED : செப் 04, 2024 03:05 AM
கரூர்;புகழூர் டி.என்.பி.எல்., நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட, இலவச கண் பரிசோதனை முகாமில், 358 பேருக்கு, 1.10 லட்சம் ரூபாய் மதிப்பில் கண்ணாடி வழங்கப்பட்டது.
கரூர் மாவட்டம், புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையில், மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
முதன்மை பொது மேலாளர் (இயக்கம்) நாகராஜன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். கண் தொடர்பான நோய்களுக்கு பரிசோதனை, சிகிச்சை அளிக்கப்பட்டது. டாக்டர் பரிந்துரைக்கப்பட்ட, 358 பேருக்கு, 1.10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டது. முகாமில், 112 பேருக்கு கண்புரை நோய் கண்டறியப்பட்டு, தனியார் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். நிகழ்ச்சியில், பொது மேலாளர் (மனித வளம்) கலைச்செல்வன், முதன்மை மேலாளர் (மனிதவளம்) சிவக்குமார், முதுநிலை மேலாளர் (மனிதவளம்) வெங்கடேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.