/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்
/
ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்
ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்
ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்
ADDED : செப் 05, 2024 02:32 AM
குளித்தலை: குளித்தலை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், நேற்று விநாயகர் சதுர்த்தி விழா சம்பந்தமாக அரசு அதிகாரிகள் மற்றும் விழா குழு-வினர், அமைப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்-றது.
ஆர்.டி.ஓ., தனலட்சுமி தலைமை வகித்து, அரசின் செயல் வடிவம் குறித்து பேசினார். தொடர்ந்து, சதுர்த்தி விழா அன்று விநாயகர் சிலை வைக்கும் இந்து முன்னணி, பா.ஜ.,வினர் மற்றும் பொதுமக்கள், அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு சிலைகள் வைக்க வேண்டும். போலீசார் அனுமதி பெற்றவுடன், ஆர்.டி.ஓ.,அலுவலகத்தில் விண்ணப்பம் வழங்கினால், மின்வா-ரியம் மற்றும் தீயணைப்புத் துறை மூலம் அனுமதி பெற்று விழா குழுவினருக்கு முறையாக வழங்கப்படும். விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியாகவும், சிறப்பாகவும், மாவட்ட நிர்வா-கத்திற்கு நற்பெயர் எடுக்கும் வகையில் கொண்டாட வேண்டும். போலீசார் அனுமதி வழங்கிய இடத்தில் விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும் என, ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
சிலை வைக்கும் விழா குழுவினர், அமைப்பினர் ஆகியோர், 8ம் தேதி மதியம் 12:30 மணியளவில் விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என, குளித்தலை டி.எஸ்.பி., செந்தில்-குமார் கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தில் ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் மகுடேஷ்வரன், தாசில்தார்கள் குளித்தலை சுரேஷ், கிருஷ்ணராயபுரம் மகேந்-திரன், கடவூர் இளம் பருதி,
இன்ஸ்பெக்டர்கள் குளித்தலை உதயகுமார், லாலாபேட்டை சர-வணன், தோகைமலை
ஜெயராமன், மாயனுார் முருகேசன், பாலவிடுதி ராஜ்குமார், மின்-வாரியம் சார்பில் குளித்தலை உதவி பொறியாளர் நடராஜன் மற்றும் தீயணைப்பு துறை அலுவலர்கள், இந்து முன்னணி மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்து
கொண்டனர்.