ADDED : ஆக 27, 2024 03:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை, காவிரி நகர் அண்ணா திருமண மண்டபம் பின் பகுதியில் உள்ள தெருவில், நான்கு நாட்களுக்கு மேலாக குப்பை அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசி வருகிறது. குப்பையில் இருந்து தொற்றுநோய் பரவுவதை தடுக்கும் வகையில், நகராட்சி நிர்வாகம் நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என, பொது மக்கள் சார்பில் நகராட்சி கமிஷனர் நந்தகுமாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து கமிஷனர் சம்பவ இடத்தை பார்வையிட்டும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. குப்பையை அகற்ற நடவடிக்கை தேவை.

