/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பெரியகாண்டி அம்மன் கோவிலில் பச்சை பூஜை
/
பெரியகாண்டி அம்மன் கோவிலில் பச்சை பூஜை
ADDED : செப் 09, 2024 07:32 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த கள்ளப்பள்ளி பஞ்., கருப்பத்துார் அக்ரஹாரத்தில் பெரியகாண்டி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், பச்சை பூஜை விழாவை முன்னிட்டு, இன்று காலை, 7:00 மணிக்கு மாயனுார் செல்லாண்டியம்மன் கோவில் படித்துறையில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல்; வீரப்பூர் பெரியகாண்டி அம்மன் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு வழிபாடு பூஜை செய்தல் நடக்கிறது.
தொடர்ந்து, அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் சுரும்பார்குழலி வைரப்பெருமாள் மற்றும் பொன்னிடும் பாறையில் வழிபாடு செய்து தீர்த்தங்களுடன் கள்ளப்பள்ளி கோவில் வருதல். மாலையில், தீர்த்தங்களுடன் திருமஞ்சனம் செய்தல். பின், பொங்கல் வைத்து அம்மன் சிறப்பு பூஜை நடக்கிறது.
அடுத்த நாள் சிறப்பு வழிபாடு செய்தல் புதன்கிழமை காலை, ஐந்து வகையான மாவிளக்குடன் பச்சை படையலிட்டு பூஜை செய்து அன்னதானம் வழங்குதல் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் குடிப்பாட்டுக்காரர்கள்செய்திருந்தனர்.