டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வு பயிற்சி வகுப்பு விரைவில் தொடக்கம்
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வு பயிற்சி வகுப்பு விரைவில் தொடக்கம்
ADDED : ஆக 18, 2026 04:57 AM
கரூர்; 'மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்விற்கு பயிற்சி வகுப்பு விரைவில் தொடங்க உள்ளது' என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:கரூர், வெண்ணைமலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள குரூப்-2 இலவச பயிற்சி வகுப்பு விரைவில் நடத்தப்படவுள்ளது. இதற்கு, செப்.,9க்குள் விண்-ணப்பிக்க வேண்டும். இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் தேர்வர்கள், தேர்வுக்கு விண்ணப்பித்த நகல், ஆதார் அட்டை நகலுடன் செப்., 10ல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்ளலாம். இப்ப-யிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் நடத்-தப்பட உள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் பயிற்சி கால அட்டவணை, நாள்தோறும் சிறுதேர்வுகள், வாராந்திர தேர்-வுகள், இணையவழி தேர்வுகள், முழு மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. மேலும், விபரங்க-ளுக்கு, 04324-223555, 6383050010, 6374319939 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
