ADDED : ஆக 17, 2024 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கடந்த சில நாட்களாக கரூர் மாவட்டத்தில், சுமாரான அளவில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு, 8:30 மணிக்கு கரூர் நகரம், தான்தோன்றிமலை, பசுபதிபாளையம், வெங்கமேடு, காந்தி கிராம், திருமாநிலையூர், சுங்ககேட் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் பெய்த மழை, 9:15 மணி வரை நீடித்தது.
இதனால், பழைய அரசு மருத்துவமனை சாலை, பசுபதீஸ்வரரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாலை, ராமகிருஷ்ணா-புரம், தெரசா கார்னர், சுங்ககேட் பகுதிகளில், சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், கரூர்-திண்டுக்கல் சாலை தான்தோன்றிமலை மயானம் அருகில், மரக்கிளை ஒன்று சாலையில் விழுந்தது. இதனால், அந்த பகுதியில் போக்குவ-ரத்து நெரிசல் ஏற்பட்டது. பிறகு, மரக்கிளையை அகற்றும் பணியில், நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் ஈடுபட்டனர்.

