/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
எள், சூரியகாந்தி பயிரில் உயர் உற்பத்தி பயிற்சி
/
எள், சூரியகாந்தி பயிரில் உயர் உற்பத்தி பயிற்சி
ADDED : ஆக 09, 2024 02:56 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் வட்டார வேளாண்மைத்துறை சார்பில், சிவாயம் வடக்கு வேப்பங்குடி கிராமத்தில், வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ், எள் மற்றும் சூரியகாந்தி பயிரில் உயர் உற்பத்தி தொழில் நுட்-பங்கள் என்ற தலைப்பின் கீழ், விவசாயிகளுக்கு பயிற்சி வழங்-கப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் வேளாண்மை உதவி இயக்குனர் அரவிந்தன் தலைமை வகித்தார். வேளாண் துறையில் செயல்படுத்தும் திட்-டங்கள், உயிர் உரங்கள் குறித்து விளக்கப்பட்டது. தற்போது நெல், விதைகள் மானியத்துடன் கிடைக்கும். மேலும் துவரை, சோளம் விதைகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இயற்கை வேளாண்மை சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் உழவன் செயலி பயன்பாடுகள் பற்றி விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும் எள் மற்றும் சூரியகாந்தி சாகுபடி, நோய் மற்றும் பூச்சிக்கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கம் தரப்பட்டது,
உதவி வேளாண்மை அலுவலர் நித்தியா, புழுதேரி வேளாண் அறிவியில் மைய தொழில்நுட்ப வல்லுனர் தமிழ்செல்வன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் முரளி கிருஷ்ணன், உதவி தொழில்நுட்ப மேலாளர் சரண்யா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.