/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆள்மாறாட்டம் செய்து ஓட்டுப்பதிவால் சலசலப்பு
/
ஆள்மாறாட்டம் செய்து ஓட்டுப்பதிவால் சலசலப்பு
ADDED : ஏப் 20, 2024 08:09 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்., குப்புரெட்டிப்பட்டியில் உள்ள ஓட்டுச்சாவடியில் சந்திரமோகன் என்பவர், சந்திரன் என்பவருடைய பெயரில் ஓட்டுப்பதிவு செய்துள்ளார்.
மதியம் 1:00 மணியளவில் சந்திரன் பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு ஓட்டு போடும் போது, அவருடைய பெயரில் வேறு ஒருவர் ஓட்டு போட்டது தெரியவந்தது. இதனால் அந்த இடத்தில் சலசலப்பு ஏற்பட்டது. சந்திரமோகன், சந்திரன் இருவரும் உறவினர் என்பதால் பிரச்னை ஏற்படுத்த வேண்டாம் என ஓட்டுச்சாவடி முகவர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில், சந்திரன் என்பவர் சந்திரமோகன் பெயரில் ஓட்டு போட்டார்.
இதனால், 30 நிமிடம் மையத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பணியில் இருந்த போலீசார் சந்திரன் என்பவரை சமாதானம் செய்து, அனுப்பி வைத்தனர்.

