/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.22.32 லட்சத்தில் கட்டப்பட்ட பள்ளி வகுப்பறை திறப்பு
/
ரூ.22.32 லட்சத்தில் கட்டப்பட்ட பள்ளி வகுப்பறை திறப்பு
ரூ.22.32 லட்சத்தில் கட்டப்பட்ட பள்ளி வகுப்பறை திறப்பு
ரூ.22.32 லட்சத்தில் கட்டப்பட்ட பள்ளி வகுப்பறை திறப்பு
ADDED : ஜூன் 14, 2024 01:37 AM
குளித்தலை, சின்னபனையூரில், 22.32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட, இரண்டு வகுப்பறை கட்டடத்தை, எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
குளித்தலை அடுத்த நெய்தலுார் பஞ்., சின்னபனையூர் யூனியன் நடுநிலைப்பள்ளியில் சேதமடைந்த கட்டடம் இடிக்கப்பட்டு, 'நமக்கு நாமே' திட்டத்தில், 22.32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக இரண்டு வகுப்பறை கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டன. எம்.எல்.ஏ., மாணிக்கம் தலைமை வகித்து திறந்து வைத்தார். தோகைமலை யூனியன் குழு தலைவர் சுகந்தி சசிகுமார், தி.மு.க., தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, யூனியன் கவுன்சிலர் சின்னையன், நெய்தலுார் பஞ்., தலைவர் விமலா வேலாயுதம் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.