/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு கரையோர வீடுகளில் சூழ்ந்த வெள்ள நீர்

ADDED : ஆக 02, 2024 01:47 AM
கரூர்,
காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பால், கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து, உபரி நீர் முழுவதும் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று பகல், 12:00 மணி நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து, 48 ஆயிரத்து, 508 கன அடி தண்ணீர் கரூர் மாவட்டத்தை கடந்து சென்று கொண்டுள்ளது.
காவிரி ஆற்றை ஒட்டிய தவிட்டுப்பாளையம் கிராமத்தில், தாழ்வாக உள்ள ஒரு சில குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அங்கிருந்தவர்களை, வருவாய் துறை அதிகாரிகள் வெளியேற்றி, அருகில் உள்ள சமுதாய கூடங்களில் தங்க வைத்துள்ளனர்.
தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அங்குள்ள குடியிருப்பு வாசிகளுக்காக அமைக்கப் பட்டுள்ள மூன்று முகாம்களில் தங்க வைக்கவும், உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. புகழூரில் காவிரி ஆற்றின் குறுக்கே, கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கட்டுமானத்துக்கு பயன்
படுத்தும் பொக்லைன் இயந்திரங்கள் உள்ளிட்ட தளவாடங்களை பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.