/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தொழில் வளர்ச்சி கழக டி.ஆர்.ஓ., கைது
/
தொழில் வளர்ச்சி கழக டி.ஆர்.ஓ., கைது
ADDED : மார் 06, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:கரூர் மாவட்டம் ஆண்டாங்கோவிலை சேர்ந்தவர் நல்லமுத்து, 55, டெக்ஸ் அதிபர். இவரிடம், கரூரில் டி.ஆர்.ஓ.,வாக பணியாற்றிய சூர்ய பிரகாஷ், 51, துணி ஆர்டர் பெற்று தருவதாக கூறினார்.
நல்லமுத்து, 15 கோடி ரூபாய் வரை, சூர்யபிரகாஷ் தரப்பினரிடம் கொடுத்தார். ஆனால் சூர்யபிரகாஷ் தரப்பினர் ஆர்டரை பெற்று தரவில்லை.
நல்லசிவம், கரூர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் செய்தார். அதையடுத்து, சென்னையில் தொழில் வளர்ச்சி கழக டி.ஆர்.ஓ.,வாக பணிபுரிந்து வரும் சூர்யபிரகாஷை, கரூர் குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.