/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவர மா.கம்யூ., வலியுறுத்தல்

ADDED : செப் 09, 2024 07:32 AM
கரூர : ஒத்தமாந்துறை விநாயகர் கோவில் அருகே கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என, மா.கம்யூ., வலியுறுத்தி உள்ளது.
க.பரமத்தி ஒன்றியத்திற்குட்பட்ட ஒத்தமாந்துறையில், மா.கம்யூ., கிளை மாநாடு நடந்தது. இதில், நிர்வாகி பாலசுப்பிரமணி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கந்தசாமி, மாநாட்டை தொடங்கி வைத்தார். கூடலுார் கீழ்பாகம் பஞ்., 5வது வார்டு ஒத்தமாந்துறை பிரதான சாலை, விநாயகர் கோவில் முதல் வாய்க்கால் வரை சிமென்ட் சாலை அமைக்க வேண்டும். அனைத்து வீதிகளுக்கும் தெருவிளக்கு அமைக்க வேண்டும். கழிவுநீர் சாக்கடைகளை சுத்தம் செய்வதுடன், டெங்கு பரவாமல் தடுக்கும் வகையில் கொசுமருந்து தெளிக்க வேண்டும்.
ஒத்தமாந்துறை விநாயகர் கோவில் அருகில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் ராஜாமுகமது, ஒன்றியக்குழு உறுப்பினர் செல்லக்கண்ணு, கிளை செயலாளர் சகாதேவன் உள்பட பலர்பங்கேற்றனர்.