/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வேகத்தடைகளில் வெள்ளை கோடு அடிக்க வலியுறுத்தல்
/
வேகத்தடைகளில் வெள்ளை கோடு அடிக்க வலியுறுத்தல்
ADDED : ஆக 11, 2024 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி;அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட, 15 வார்டுகளில் கடந்த இரண்டு மாதங்களுக்குள், 15க்கும் மேற்பட்ட இடங்களில் சாலைகள் போடப்பட்டுள்ளது.
இதில் வேகத்தடைகளும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றின் மேல், வெள்ளை கோடு இல்லாததால் புதிய சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். ஒரு சில வார்டுகளில் பொதுமக்கள், தங்களது செலவிலேயே வெள்ளை கோடுகள் அடித்துக் கொள்கின்றனர். பேரூராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு, வேகத்தடைகளுக்கு வெள்ளை கோடுகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

