ADDED : ஜூலை 19, 2024 01:09 AM

தீ தடுப்பு விழிப்புணர்வு
திருப்பூர், காந்திநகர், ஏ.வி.பி., டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. ஏ.வி.பி., கல்வி குழுமங்களின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை வகித்தார். திருப்பூர் வடக்கு தீயணைப்பு அலுவலர்கள், தீயினால் ஏற்படும் விபத்து, தற்காத்துக் கொள்ளும் முறை, காயம் பட்டவருக்கு உடனடியாக அளிக்க வேண்டிய முதலுதவி, தீ விபத்தை தடுக்கும் முறை குறித்து செயல் விளக்கம் அளித்தனர். ஏ.வி.பி., சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் ராஜேஷ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
போதை தடுப்பு கருத்தரங்கம்
அவிநாசிபாளையம், ஜெய் ஸ்ரீராம் அகாடமி மெட்ரிக் பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. பள்ளி தலைவர் தங்கராஜ், துணை தலைவர் முத்துஅருண் தலைமை வகித்தனர். பள்ளியின் முதல்வர்கள் கலைச்செல்வி, யமுனாதேவி முன்னிலை வகித்தனர். 'போதை பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு' எனும் தலைப்பில், மாவட்ட மதுவிலக்கு அமலாக்கபிரிவு இன்ஸ்பெக்டர் பரிமளாதேவி, எஸ்.ஐ., அசோக்குமார், அவிநாசிபாளையம் இன்ஸ்பெக்டர் விஜயா பேசினார். முன்னதாக, மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். பள்ளி நிர்வாக அலுவலர் சரவணன் நன்றி கூறினார்.
ஐ.ஐ.டி.,யில் மாணவர்கள்
திருப்பூர், காங்கயம் ரோடு, வித்ய விகாசினி மெட்ரிக் பள்ளி நிர்வாகம், 50 மாணவர்களை தேர்வு செய்து, சென்னை ஐ.ஐ.டி., மற்றும் பிர்லா கோளரங்கம் ஆகிய இடங்களை பார்வையிட அழைத்துச் சென்றது. அதில், மாணவ, மாணவியர் ஐ.ஐ.டி., யில் பல்வேறு துறைகளை ஆர்வமுடன் பார்வையிட்டனர். மாணவர்களுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக, அறிவியலில் முக்கியத்துவம் தருவதற்காக ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர், நிர்வாக அதிகாரி, பொருளாளர், பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
தேர்தல் நடைமுறை விளக்கம்
மங்கலம் கதிரவன் மெட்ரிக் பள்ளியில் பள்ளி மாணவர் தேர்தல் நடந்தது. பள்ளி தாளாளர் ஸ்ரீசரண்யா ராஜ்குமார் பேசினார். தேர்தல் நடைமுறை எவ்வாறு வந்தது, எப்படி ஓட்டளிப்பது என்பது குறித்து மாணவர்கள் ஆர்வமாக தெரிந்து கொண்டனர். மங்கலம் போலீஸ் எஸ்.ஐ., வெள்ளியங்கிரி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.மாணவர் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. நந்தினி மாணவர் தலைவியாகவும், துணைத்தலைவராக குருபிரசாத் தேர்வு செய்யப்பட்டனர்.