/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வயலுார் கிராமத்தில் கொசுஒழிப்பு பணிகள் தீவிரம்
/
வயலுார் கிராமத்தில் கொசுஒழிப்பு பணிகள் தீவிரம்
ADDED : செப் 04, 2024 03:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் அடுத்த, வயலுார் கிராமத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில், கொசு ஒழிப்பு பணி நடந்தது.
மழை காலங்களில் குடியிருப்பு பகுதியில், கழிவு நீர் தேங்காமல் இருக்கும் வகையில், கழிவு நீர் அகற்றுவதற்கான பணிகள் மற்றும் குடியிருப்பு மக்களுக்கு ஆலோசனை வழங்குதல், குடிநீர் தொட்டி பராமரிப்பு, தெருக்களில் துாய்மை பணி, பிளாஸ்டிக் கழிவுகள், பழைய டயர்களை அகற்றுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டது.