ADDED : ஜூலை 28, 2024 06:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்டம் கடவூர் பசும்பொன் நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 49).
இவர் பழைய இரும்பு கடை நடத்தி வந்தார். இவர் இன்று(ஜூலை 28) பூச்சி மருந்து தெளிப்பான் இயந்திரத்தை உடைத்து பாகங்களை தனியாக பிரிக்கும் போது மோட்டார் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.