ADDED : ஆக 21, 2024 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாசன வாய்க்காலை துார்வார கோரிக்கை
அரவக்குறிச்சி, வாங்கல் பெரிய வாய்க்கால், புகழூர் பகுதியில் இருந்து பிரிந்து கடம்பன்குறிச்சி, என்.புதுார், வாங்கல் வரை செல்கிறது. இப்பகுதி விவசாயிகளின் முக்கிய பாசன வாய்க்காலாக உள்ளது. இதை பயன்படுத்தி வாங்கல் சுற்றுவட்டாரத்தில் கரும்பு, கோரை, வாழை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்கின்றனர். இந்நிலையில் வாய்க்கால் முழுவதும் செடிகள் முளைத்துள்ளதால் விவசாயிகளுக்கு சென்று வந்த நீர் தடைபட்டுள்ளது. இதனால் பாசனத்துக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை. பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை அதிகாரிகள், வாய்க்காலை துார்வர வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.