/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கடம்பவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் குளித்தலையில் பள்ளிகளுக்கு விடுமுறை

ADDED : ஜூலை 12, 2024 01:18 AM
கரூர்,குளித்தலை, கடம்பவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, குளித்தலை வட்டார பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை:
கரூர் மாவட்டம், குளித்தலை அருகில் கடம்பவனேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி வழிபட வாய்ப்புள்ளதால், குளித்தலை வட்டாரத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும், இன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த விடுமுறை நாளுக்கு பதிலாக வரும், 27 (சனிக்கிழமை) அன்று பள்ளிகளுக்கு மட்டும் அரசு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு கூறியுள்ளார்.