/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உலக அமைதி வேண்டி கஞ்சி கலய ஊர்வலம்
/
உலக அமைதி வேண்டி கஞ்சி கலய ஊர்வலம்
ADDED : ஆக 17, 2024 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த வைகைநல்லுார் பஞ்., கீழகுட்டப்பட்டியில் அமைந்துள்ள ஆதிபராசக்தி மன்றம் சார்பில், உலக அமைதி வேண்டி, 21ம் ஆண்டு கஞ்சி கலயம், அக்னிசட்டி ஏந்தி ஆன்மிக ஊர்வலம், நேற்று தினம் இரவு நடந்தது.
இந்த ஊர்வலம், கீழ குட்டப்பட்டியில் தொடங்கி, யூனியன் ஆபீஸ், நான்கு ரோடு, ராணி மங்கம்மாள் சாலை, கோட்டமேடு வழியாக சென்று, ஆதிபராசக்தி மன்றத்தை அடைந்தது. இதில், ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழாக்குழு சார்பில் அனைவ-ருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

