/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கராத்தே அசோசியேஷன் செயற்குழு கூட்டம்
/
கராத்தே அசோசியேஷன் செயற்குழு கூட்டம்
ADDED : மே 01, 2024 02:15 AM
கரூர்:கரூர் மேட்டுத்தெருவில், இந்தியாஸ் கியகிசின் கராத்தே அசோசியேஷன் செயற்குழு கூட்டம் நடந்தது. தேசிய தலைவர் சீகான் ராமதாஸ் தலைமை வகித்தார். கூட்டத்தில் ஸ்போட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியாவில் மற்றும் கேலோ இந்தியாவில் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டது. இதற்காக நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஸ்போட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியாவின் விதிகள் மற்றும் நடைமுறைகள் உருவாக்கப்பட்டன. தமிழ்நாடு சிலம்ப செயலாளராக கிருஷ்ணமூர்த்தியும், துணை செயலாளராக வீரமணியும், தமிழ்நாடு செயலாளராக பாலசுப்ரமணியனும் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில், தேசிய செயலாளர் மதன்குமார், தேசிய துணை தலைவர் ரவிச்சந்திரன், தேசிய இணை தலைவர் குமாரசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.