/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் கூட்டுறவு பயிற்சி நிலையம் 28 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம்
/
கரூரில் கூட்டுறவு பயிற்சி நிலையம் 28 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம்
கரூரில் கூட்டுறவு பயிற்சி நிலையம் 28 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம்
கரூரில் கூட்டுறவு பயிற்சி நிலையம் 28 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம்
ADDED : செப் 12, 2024 07:46 AM
கரூர்; ''கடந்த, 28 ஆண்டுகளாக கரூரில் கூட்டுறவு துணை பயிற்சி நிலையம் வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள, வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க கட்ட-டத்தில், தமிழ்நாடு கூட்டுறவு துணை பயிற்சி நிலையம் திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் தங்கவேல் துவக்கி வைத்து பேசியதாவது:
கரூர் மாவட்டம் ஆரம்பிக்கப்பட்ட, 1996ம் ஆண்டு முதல் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் இல்லாமல் இருந்தது. மாவட்டத்தில் இருந்து, 62 மாணவ மாணவிகள் நாமக்கல், திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டு-றவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் கூட்டு-றவு பட்டயப்பயிற்சி பெற தினமும், 80 கி.மீ., பயணம் மேற்கொண்டு வந்தனர். கரூர் மாவட்-டத்திற்கென, தனியாக கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் வேண்டும் என்ற கோரிக்கை, 28 ஆண்டுகளாக நிறைவேறாமல் இருந்து வந்-தது. தற்போது, கரூர் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க கட்டடத்தில், கூட்டு-றவு துணை பயிற்சி நிலையம் தொடங்கப்பட்-டுள்ளது. மாவட்டத்தில், 122 கூட்டுறவு நிறுவ-னங்கள் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரிந்திட பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரிய, கூட்டுறவு பட்டயப்ப-யிற்சி பெற வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இவ்வாறு பேசினார்.கரூர் எம்.பி., ஜோதிமணி, மேயர் கவிதா, துணை மேயர் சரவணன், மண்-டல குழுத்தலைவர் ராஜா, கூட்டுறவு சங்கங்-களின் மண்டல இணைப்பதிவாளர் கந்தராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.