/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் ஸ்ரீ சங்கர வித்யாலயா பள்ளி ஆசிரியருக்கு கிரீன் சாம்பியன் விருது

ADDED : ஆக 22, 2024 01:47 AM
கரூர், ஆக. 22-
கரூர், ஸ்ரீ சங்கர வித்யாலயா பள்ளி ஆசிரியர் ராஜசேகரனுக்கு, கிரீன் சாம்பியன் விருது கிடைத்துள்ளது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் (2023ம் ஆண்டு), சிட்டுக்குருவிகள் பாதுகாப்பு, மரக்கன்றுகள் வழங்குதல், சுற்றுச்சூழல் தொடர்பான ஊக்குவிப்பு முயற்சிகளுக்கு, ஆசிரியர் ராஜசேகரனுக்கு கிரீன் சாம்பியன் விருது மற்றும் ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலை வழங்கப்
பட்டுள்ளது.
இந்த விருதை கடந்த, 15ல் நடந்த சுதந்திர தின விழாவில், கலெக்டர் தங்கவேல், ஆசிரியர் ராஜசேகரனுக்கு வழங்கினார். விருது பெற்ற ஆசிரியர் ராஜசேகரனை, ஸ்ரீ சங்கர வித்யாலயா பள்ளி நிறுவனர் பழனிசாமி, தாளாளர் அசோக்சங்கர், பள்ளி முதல்வர் காமேஷ்வரராவ் மற்றும் ஆசிரியர்கள் பாராட் டினர்.