/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரன்சி நோட்டு அலங்காரத்தில் கரூர் வேம்பு மாரியம்மன்
/
கரன்சி நோட்டு அலங்காரத்தில் கரூர் வேம்பு மாரியம்மன்
கரன்சி நோட்டு அலங்காரத்தில் கரூர் வேம்பு மாரியம்மன்
கரன்சி நோட்டு அலங்காரத்தில் கரூர் வேம்பு மாரியம்மன்
ADDED : ஆக 17, 2024 04:59 AM
கரூர்: ஆடி கடைசி வெள்ளியையொட்டி, கரூர் வேம்பு மாரியம்மன் கரன்சி நோட்டுக்கள் அலங்காரத்தில் நேற்று பக்தர்களுக்கு அருள்-பாலித்தார்.
ஆடி கடைசி வெள்ளியையொட்டி, கரூர் நகரில் பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், மாரியம்மன் கோவில், தான்-தோன்றி மலை வெங்கடரமண கோவில், பகவதி அம்மன் கோவில், காக்காவாடி காமாட்சி அம்மன் கோவில், ஜவஹர் பஜார் கன்னிகா பரமேஸ்வரி கோவில், கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி கோவில், வெங்கமேடு காமாட்சியம்மன் கோவில், வேலாயுதம்பாளையம் மகா மாரியம்மன் கோவில் உள்ளிட்ட, பல்வேறு கோவில்களில் பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். வேம்பு மாரியம்மன் கோவிலில், மூலவர் அம்மன் கரன்சி நோட்-டுக்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிறகு,
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல், வெண்ணைமலை, பவித்திரம், புகழூரில் உள்ள, பாலசுப்பிரம-ணிய கோவில்களிலும், நன்செய் புகழூர் மேகபாலீஸ்வரர் கோவி-லிலும், ஆடி கடைசி வெள்ளியையொட்டி பக்தர்கள் நேற்று சுவா-மியை வழிபட்டனர்.

