/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிட்ஸ் அண்டு பேமிலி ஷாப்பிங் கண்காட்சி இன்றுடன் நிறைவு
/
கிட்ஸ் அண்டு பேமிலி ஷாப்பிங் கண்காட்சி இன்றுடன் நிறைவு
கிட்ஸ் அண்டு பேமிலி ஷாப்பிங் கண்காட்சி இன்றுடன் நிறைவு
கிட்ஸ் அண்டு பேமிலி ஷாப்பிங் கண்காட்சி இன்றுடன் நிறைவு
ADDED : ஆக 26, 2024 02:27 AM
கரூர்: கரூர் பிரேம் மஹாலில், கோவை டிரைமேக் ஈவன்ட்ஸ், கரூர் ரோட்டரி விங்ஸ் கிளப் ஆகியவை சார்பில், கிட்ஸ் அண்டு பேமிலி ஷாப்பிங் கண்காட்சியை, ரோட்டரி மாவட்டம்-3000 வருங்கால கவர்னர் மணி தொடங்கி வைத்தார். ரோட்டரி விங்ஸ் கிளப் தலைவர் சங்கர நாராயணன், செயலாளர் கணேஷ், சசிக்-குமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர்.
இதுகுறித்து, கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் இம்ரன் கூறியதா-வது:
கரூரில் முதன் முறையாக, 120 அடியில் அவதார் உலகம், வீட்டு உபயோக பொருட்கள், 2, 4 சக்கர வாகனங்கள், நுாற்றுக்கும் மேற்பட்ட உணவு வகைகள், குழந்தைகளை மகிழ்விக்க நீச்சல் குளம், 20 அடி உயரத்தில் பலுான், ராட்டினம் என, 50க்கும் மேற்பட்ட புதிய விளையாட்டுகளும், பேஷன் ஆடைகள், மேஜிக் ஷோ, வண்ண மீன்கள், ஒட்டக சவாரி, ஸ்னோவேர்ல்டு என, 180க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளன.
கண்காட்சிக்கு வருபவர்கள், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்-பட்டு, 25 பேருக்கு, 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசு வழங்-கப்படுகிறது. இக்கண்காட்சி, காலை முதல் இரவு வரை நடக்கி-றது. இந்த கண்காட்சி, இன்றுடன் நிறைவடைகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடக்க விழாவில், அத்யா பர்னிச்சர் நகுல்சாமி, கிரா-விட்டான்ஸ் பரமேஸ்வரி, கிராபிடெக் ஆறுமுகம், ஐ.எஸ்.ஓ., அருணாச்சலம், குமரன் கார்ட்ஸ் சந்துரு, இன்டகிரேட்டட் அர-விந்தகிருஷ்ணன், ஓல்டு வேர்ல்டு ஆனந்த், கம்போர்ட் ஆப்-டிகல்ஸ் ராஜ்மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

