/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை கடம்பர் கோவில் ஆற்றங்கரையோரம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

ADDED : ஆக 05, 2024 02:00 AM
குளித்தலை,ஆடி அமாவாசையையொட்டி, குளித்தலை கடம்பர் கோவில் காவிரி ஆற்றங்கரையில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.
காசிக்கு அடுத்தபடியாக, புண்ணிய தீர்த்தமாக ஹிந்துக்கள் கருதுவது காவிரி நதியாகும். இந்த காவிரியில் நீராடி, காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள கடம்பவனேஸ்வரரை தரிசனம் செய்தால், காசிக்கு சென்று காசி விஸ்வநாதரை தரிசித்தால் என்ன பலன் கிடைக்குமோ அதே பலன் கிடைக்கப்பெற்றதாக பக்தர்கள் ஐதீகம். இதே வாசகத்தை தான், வேத விற்பன்னர்கள் காவிரி கரையில் திதி கொடுக்க வரும் பக்தர்களுக்கு, சுலோகமாக சொல்லி வருகின்றனர்.
ஆண்டுதோறும், கரூர் மாவட்டம், குளித்தலை காவிரி கடம்பன் துறைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து காவிரியில் நீராடி, கடம்பவனேஸ்வரரை தரிசித்து செல்வது வழக்கம். மேலும், இந்த காவிரி நதிக்கரையில் பரிகாரம் செய்ய வாய்ப்பு உள்ளதால், இதை பரிகார ஸ்தலம் என்றும் தெரிவிக்கின்றனர்.
இவ்வளவு பிரசித்தி பெற்ற கடம்பவனேஸ்வரர் ஆலயத்தின் காவிரி படித்துறையில், இந்தாண்டு குளிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இதனால், குளித்தலை, தோகைமலை, அய்யர்மலை, பஞ்சப்பட்டி, நங்கவரம், மருதுார் உள்ளிட்ட பல கிராமங்களில் பொது மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். தொடர்ந்து, தர்ப்பணம் செய்தவர்கள், கடம்பவனேஸ்வரர் கோவிலில் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பசு மாட்டுக்கு அகத்திக்கீரை வழங்கினர்.