/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெண்ணைமலை பாலசுப்பிரமணியர் கோவிலில் கும்பாபிேஷக விழா
/
வெண்ணைமலை பாலசுப்பிரமணியர் கோவிலில் கும்பாபிேஷக விழா
வெண்ணைமலை பாலசுப்பிரமணியர் கோவிலில் கும்பாபிேஷக விழா
வெண்ணைமலை பாலசுப்பிரமணியர் கோவிலில் கும்பாபிேஷக விழா
ADDED : ஏப் 23, 2024 04:34 AM
கரூர்: கரூர், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், நேற்று மஹா கும்பாபிேஷகம் கோலாகலமாக நடந்தது.
பிரசித்தி பெற்ற கோவிலில், மஹா கும்பாபிேஷக விழா கடந்த, 6 ல் கிராம சாந்தியுடன் தொடங்கியது.
கடந்த, 19 அன்று முதல் கால யாக பூஜை, 20ல் இரண்டாம் கால யாக பூஜை மற்றும் மூன்றாம் கால யாக பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை, நான்கு மற்றும் ஐந்தாம் கால யாக பூஜைகள் நடந்தது.
நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு ஆறாம் கால யாக பூஜை மற்றும், 9:30 மணிக்கு மஹா கும்பாபிேஷகம் நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். 10:00 மணிக்கு மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு நீர் மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று முதல், மண்டலாபி ேஷக பூஜை தொடங்குகிறது.