/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை பாப்பாத்தியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
/
குளித்தலை பாப்பாத்தியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
குளித்தலை பாப்பாத்தியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
குளித்தலை பாப்பாத்தியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : செப் 06, 2024 01:38 AM
குளித்தலை, செப். 6-
குளித்தலை அடுத்த,
ரத்தனம் பிள்ளைப்புத்துாரில் பாப்பாத்தி அம்மன், விநாயகர், பிடாரியம்மன், மதுரை வீரன், கருப்பணசுவாமி ஆகிய பரிவார தெய்வங்கள் அடங்கிய கோவில் உள்ளது. இங்கு கோவிலை புதிதாக கட்டுவதும், கும்பாபிஷேக விழா நடத்துவதும் என முடிவு எடுத்து, ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் கோவில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டனர்.
இப்பணி நிறைவடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் காலை குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில் காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டது. பின்னர், புனித நீர் அடங்கிய கும்பத்தை சிவாச்சாரியார்கள், யாக வேள்வி சாலையில் வைத்து கணபதி பூஜை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து பூஜை, லட்ச்சார்ச்சனை செய்தனர்.
நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜை நிறைவடைந்ததும், புனித நீர் கும்பத்தை சிவாச்சாரியார்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர், வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். கலசத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்ட பின், பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. திரளான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். விழாக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.