sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு

/

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு


ADDED : ஏப் 07, 2024 03:46 AM

Google News

ADDED : ஏப் 07, 2024 03:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: ''தமிழகத்தில், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது,'' என, த.மா.கா., தலைவர் வாசன் பேசினார்.

கரூர் அருகே புலியூரில், பா.ஜ., வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து, த.மா.கா., தலைவர் வாசன் பேசியதாவது:

பிரதமர் மோடி தலைமையிலான அரசில், பெண்களுக்கு அதிகப்படியாக கடன் வழங்கியுள்ளார். மகளிருக்கு பெருமை சேர்க்கும் வகையில், ஐந்து நாட்களுக்கு முன், 100 நாள் வேலை திட்டத்தில் நாள் ஒன்றுக்கு, 319 ரூபாய் கூலியாக உயர்த்தி வழங்கியுள்ளார். கரூர் லோக்சபா தொகுதியில் வளர்ச்சி பணிகளை, தி.மு.க., அரசு மேற்கொள்ளவில்லை. மாறாக வளர்ச்சி திட்டங்களின் மூலம் பணம் சம்பாதிக்க நினைக்கின்றனர்.

கரூர் அருகில், கோயம்பள்ளி அமராவதி பாலம் பணி முடிந்த நிலையில், மக்கள் பயன்பாட்டுக்கு திறந்த விடப்படவில்லை. கரூர், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, திண்டுக்கல், பழநியை இணைக்கும் வகையில், புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும். மத்திய அரசிடம் கேட்டு, இந்த பணியை மேற்கொள்ள வேண்டிய கரூர் எம்.பி., ஜோதிமணி உறங்கி கொண்டிருக்கிறார்.

கரூர் மாநகராட்சி பகுதிகளில் அடிக்கடி மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது. தற்போது தேர்வு நேரம் என்பதால், மாணவர்கள் படிக்க முடியாமல் திணறுகின்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது. கொலை, கொள்ளை, திருட்டு, செயின் பறிப்பு, இளைஞர்கள் இடையே கஞ்சா பழக்கம் காரணமாக பெற்றோர் பீதியில் உள்ளனர். இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.

இவ்வாறு பேசினார்.






      Dinamalar
      Follow us