/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மகா மாரியம்மன் கோவிலில் மாடு மாலை தாண்டும் திருவிழா
/
மகா மாரியம்மன் கோவிலில் மாடு மாலை தாண்டும் திருவிழா
மகா மாரியம்மன் கோவிலில் மாடு மாலை தாண்டும் திருவிழா
மகா மாரியம்மன் கோவிலில் மாடு மாலை தாண்டும் திருவிழா
ADDED : மார் 29, 2024 12:58 AM
குளித்தலை:குளித்தலை அடுத்த சிவாயம் பஞ்., கோனாரியூரில் மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முதன் முதலாக மாடு மாலை தாண்டும் திருவிழா நடத்த, ஊர் முக்கியஸ்தர்கள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த, 17ல் காப்பு கட்டுதலுடன் திருவிழா துவங்கியது. அன்று முதல், 8 நாள் விரதமிருந்த பக்தர்கள், மகா மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து, தினமும், 3 கால சிறப்பு பூஜைகளை செய்து வந்தனர்.
முதல் நாள் திருவிழா கடந்த, 24ல் தொடங்கியது. அன்று இரவு, கரகம் பாலிக்கப்பட்டு, தேவராட்டத்துடன் உருமி, தாரை தப்பட்டை முழங்க வாண வேடிக்கைகளுடன் ஊர்வலமாக சென்றனர். பின், பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக்கடன்கள் செய்து வழிபட்டனர். 2ம் நாள் ஒயிலாட்டம், பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
தொடர்ந்து, கிடா வெட்டுதல், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 3ம் நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, மாலை தாண்டும் நிகழ்ச்சி நடந்தது.இதில், 2 கி.மீ., தொலைவில் உள்ள எல்லைசாமி கோவிலுக்கு சலை எருது மாடுகளை அழைத்து சென்றனர். அங்கு, எல்லைச்சாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து, சலை எருது ஓட்டத்தை தொடங்கி வைத்தனர். எல்லை கோட்டை நோக்கி, 300க்கும் மேற்பட்ட மாடுகள் சீறிப்பாய்ந்தன.
இதில், முதல், இரண்டாவது இடம் பிடித்த மாடுகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் திரளான மக்கள் பங்கேற்றனர்.

