/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மின் கட்டண உயர்வு ரத்து செய்ய கோரி மா.கம்யூ., மனு
/
மின் கட்டண உயர்வு ரத்து செய்ய கோரி மா.கம்யூ., மனு
ADDED : ஜூலை 26, 2024 02:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி மாநகர செயலாளர் தண்டபாணி தலைமையில், கரூர் மண்டல தலைமை பொறியாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதனால், ஏழை, நடுத்தர மக்கள், சிறு தொழில் உள்பட அனைத்து தரப்பி-னரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே மத்திய அரசின் தவ-றான பொருளாதார கொள்கையால், மக்கள் அவதிப்பட்டு வரு-கின்றனர். இந்த சூழிலில், மின் கட்டணம் உயர்வு மக்களால் தாங்க முடியாத சுமை ஏற்படுத்தும். உடனடியாக மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

