/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் செப்., 6 முதல் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்த முடிவு

ADDED : செப் 03, 2024 03:31 AM
கரூர்: 'கரூர் மாநகராட்சி துாய்மை பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால், செப்., 6 முதல் பணி புறக்க-ணிப்பு போராட்டம் நடத்தப்படும்' என, ஆதித் தமிழர் பேரவை மாவட்ட பொருளாளர் பாரதி, கரூர் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தார்.
மனுவில் கூறியிருப்பதாவது: கரூர் மாநகராட்சியில் ஒப்பந்த நிறு-வனம் முறையில், 600க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.இதில், துாய்மை பணியாளர் ராமலிங்கம், வேலை செய்யும் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து கரூர் மருத்துவ கல்லுாரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுவரை, மாந-கராட்சி அதிகாரிகள், ஒப்பந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் எட்டி கூட பார்க்கவில்லை. இது குறித்து நேரில் சென்று பல முறை கேட்ட பிறகு கூட மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், பல கட்ட பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், துாய்மை பணியாளர்களுக்கு நிர்ணயம் செய்த ஊதியம், 710 ரூபாய், வாரம் ஒரு நாள் விடுமுறை, மாவட்ட தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் போன்ற கோரிக்கை அமல்ப-டுத்தவில்லை.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வரும், 6 முதல் கரூர் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை மற்றும் பணி புறக்க-ணிப்பு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.