/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நங்கவரம் டவுன் பஞ்., கூட்டம் 20 தீர்மானங்கள் நிறைவேற்றம்
/
நங்கவரம் டவுன் பஞ்., கூட்டம் 20 தீர்மானங்கள் நிறைவேற்றம்
நங்கவரம் டவுன் பஞ்., கூட்டம் 20 தீர்மானங்கள் நிறைவேற்றம்
நங்கவரம் டவுன் பஞ்., கூட்டம் 20 தீர்மானங்கள் நிறைவேற்றம்
ADDED : ஆக 02, 2024 01:47 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்., சாதாரண கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
டவுன் பஞ்., தலைவர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். துணைத்
தலைவர் அன்பழகன், செயல் அலுவலர் காந்தரூபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டம் 2024-25ம் ஆண்டின் கீழ், கல்லடச்சி வாய்க்கால் கரையில் தடுப்பு சுவருடன் கூடிய தார்ச்சாலை அமைத்தலுக்கு, 157 லட்சம், சவாரி மேடு பிரிவுப்பாதையில் உள்ள வளமீட்பு பூங்காவில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிக்காக, 78 ஆயிரத்து 647 ரூபாய், மாடுவிழந்தான்பாறை பகுதியில் 9 லட்சம் மதிப்பில் கழிப்பிடம் கட்டுதல், வளமீட்பு பூங்காவில் குப்பைகளை உலர வைக்க மேடை அமைப்பது உள்பட, 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கவுன்சிலர்கள், டவுன் பஞ்., அலுவலர்கள். பணியாளர்கள் கலந்து கொண்டனர்.