/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நெரூர் சதாசிவ பிரமேந்திரர் ஆராதனை இன்று தொடக்கம்
/
நெரூர் சதாசிவ பிரமேந்திரர் ஆராதனை இன்று தொடக்கம்
ADDED : மே 12, 2024 12:23 PM
கரூர்: கரூர் மாவட்டம், நெரூரில் பிரசித்தி பெற்ற சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானம் உள்ளது. அதில், ஆண்டுதோறும் மே மாதம் ஆராதனை விழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு, இன்று காலை சதாசிவ பிரமேந்திரர் பட உற்சவத்துடன் விழா தொடங்குகிறது. அதைதொடர்ந்து, சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானத்தில், நாள்தோறும் உஞ்ச விருத்தி, கிராம பிரதட்சினம், லட்சார்ச்சனை, வேதபாராயணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
வரும், 18ல் ஆராதனை விழாவையொட்டி, சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானத்தில் தெய்வீக பேருரைகள், திவ்யநாம சங்கீர்த்தனை, பஜனை மற்றும் சதாசிவ பிரமேந்திரர் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை, நெரூர் சதாசிவ பிரமேந்திரர் சபா கமிட்டி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.