/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புதுமண தம்பதியர் கல்யாண மாலையை பாசன வாய்க்காலில் விட்டு வழிபாடு
/
புதுமண தம்பதியர் கல்யாண மாலையை பாசன வாய்க்காலில் விட்டு வழிபாடு
புதுமண தம்பதியர் கல்யாண மாலையை பாசன வாய்க்காலில் விட்டு வழிபாடு
புதுமண தம்பதியர் கல்யாண மாலையை பாசன வாய்க்காலில் விட்டு வழிபாடு
ADDED : ஆக 04, 2024 03:16 AM
குளித்தலை: கரூர் மாவட்டம், குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றில், 1.70 லட்சம் கனஅடி உபரி நீர் வருவதால், காவிரியில் புனித நீராட, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும், பொதுமக்கள் காவிரி ஆற்றில் இறங்காமல் இருக்க, வருவாய், போலீசார், பொதுப்பணி, தீயணைப்பு துறையினர், கரைகளில் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்-றனர்.
இந்நிலையில், நேற்று ஆடிப்பெருக்கையொட்டி, புதுமண தம்-பதியர், சுமங்கலி பெண்கள், திருமணம் ஆகாத பெண்கள் காவிரி தாயை வழிபட ஆற்றிற்கு வந்தனர். ஆனால், போலீசார் தடுத்து திருப்பி அனுப்பினர். இதனால், பொதுமக்கள், புது-மண தம்பதியர் அருகில் உள்ள கோவில், தென்கரை பாசன வாய்க்கால் கரையோரம் வாழை இலையில் பழம், அரிசி படை-யலிட்டு, மஞ்சள் கயிறை வழிபட்டனர். பின், புதிய மஞ்சள் கயிறை புதுமணத் தம்பதியர், சுமங்கலி பெண்கள் ஒருவருக்கொ-ருவர் மாற்றிக் கொண்டனர். தொடர்ந்து, கடம்பர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். காவிரி ஆற்றில் இறங்க தடை விதிக்-கப்பட்டதால், புதுமண தம்பதியர் தங்களது கல்யாண மாலை-களை பாசன வாய்க்காலில் விட்டனர்.