/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஜவகர் பஜார் கோவில் இடத்திற்கு நோட்டீஸ் திருத்தொண்டர் பேரவை தலைவர் தகவல்

ADDED : ஜூலை 26, 2024 02:04 AM
கரூர்:''கரூர், ஜவகர் பஜாரில் உள்ள கோவிலுக்கு சொந்தமான, 105 இடங்களில் ஆக்கிரமிப்பு எடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என, திருத்தொண்டர் பேரவை தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கரூரில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கரூர் மாவட்டத்தில் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை பாதுகாக்கும் வகையில், அரசு அதிகாரிகள் உதவியுடன் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டது. இதில், 4,000 ஏக்கர் கோவிலுக்கு சொந்தமான நிலம் என கண்டறியப்பட்டது. அதை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு சொந்தமான இடங்களை வாங்கி யாரும் ஏமாற வேண்டாம். கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ஜவகர் பஜாரில் உள்ள, 105 இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்ற, அறநிலையத்துறை திருப்பூர் இணை ஆணையரால் இறுதி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆக்கிரமிப்பு உடனடியாக அகற்றப்படும். கரூர் வெண்ணைமலை பாலசுப்ரமணியர் கோவில் ஆக்கிரமிப்பு இடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவில் நில ஆக்கிரமிப்பு நிலதாரர்கள், சட்ட ரீதியாக பிரச்னையை அணுக வேண்டும். அரசியல்வாதிகளிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.
இவ்வாறு கூறினார்.