/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாவட்ட நுாலகத்தில் நுாலகர் தின விழா
/
மாவட்ட நுாலகத்தில் நுாலகர் தின விழா
ADDED : ஆக 13, 2024 06:10 AM
கரூர்: கரூர் மாவட்ட மைய நுாலகத்தில், வாசகர் வட்டம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கரூர் டெக்ஸ்சிட்டி சார்பில், நுாலகர் தின விழா நடந்தது.
வாசகர் வட்ட தலைவர் சங்கர் தலைமை வகித்தார். இந்திய நுாலக தந்தை அரங்கநாதன் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. அரசு பள்ளியில் பயிலும் ஆர்வமுடைய, 500 மாணவ, மாணவிகள் கரூர் மாவட்ட மைய நுாலகத்தில் உறுப்பி-னர்களாக இணைந்தனர். போட்டி தேர்வுகளில் மாணவர்கள் பயன்பெறும் வகையில், வாங்கல், குப்பிச்சிபாளையம், தான்-தோன்றிமலை கிளை நுாலகங்களில் பயிற்சி மையம் அமைத்து தர, ஆறு லட்சம் ரூபாய் மதிப்பில் நுால்கள், தளவாடங்கள் நன்-கொடையாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட நுாலக அலுவலர் சிவக்குமார், ரோட்-டரி கிளப் ஆப் கரூர் டெக்ஸ்சிட்டி தலைவர் ஜெயக்குமார், செய-லாளர் சசிக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.