/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு கலைக்கல்லுாரியில் ஊட்டச்சத்து திருவிழா
/
அரசு கலைக்கல்லுாரியில் ஊட்டச்சத்து திருவிழா
ADDED : செப் 04, 2024 03:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்;கரூர் அரசு கலைக்கல்லுாரி ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள் துறை சார்பில், ஊட்டச்சத்து திருவிழா நேற்று நடந்தது.
விழாவில், கல்லுாரி வளாகத்தில், சிறுதானிய சிறுதிடல் விற்பனையை கல்லுாரி முதல்வர் அலெக்ஸாண்டர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள் துறையில் பயின்று வரும், மாணவ, மாணவிகள் தயாரித்த உணவு பொருட்கள், பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில், முளை கட்டிய பயறு, கம்பங்கூல் ஆகிய உணவு பொருட்களும், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. விழாவில், கல்லுாரி துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.